الجن

تفسير سورة الجن

الترجمة التاميلية

தமிழ்

الترجمة التاميلية

ترجمة معاني القرآن الكريم للغة التاميلية، ترجمها الشيخ عبد الحميد الباقوي، نشرها مجمع الملك فهد لطباعة المصحف الشريف بالمدينة المنورة. عام الطبعة 1434هـ.

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا﴾

1.
(நபியே!) கூறுவீராக: வஹ்யி மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதாவது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று(த் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி) கூறினார்கள்: ‘‘நிச்சயமாக நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம்.

﴿يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ ۖ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا﴾

2. அது நேரான வழியை அறிவிக்கிறது. ஆகவே, அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் அறவே இணையாக்க மாட்டோம்.

﴿وَأَنَّهُ تَعَالَىٰ جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا﴾

3. நிச்சயமாக எங்கள் இறைவனுடைய மகத்துவம் மிக்க மேலானது. அவன் எவரையும் (தன்) மனைவியாகவோ, குழந்தையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.

﴿وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا﴾

4.
மேலும், நிச்சயமாக நம்மிடமுள்ள மடையன் அல்லாஹ்வின் மீது (அவனுடைய பரிசுத்தத் தன்மைக்குத்) தகாத விஷயங்களைக் கூறுகிறவனாக இருந்தான்.

﴿وَأَنَّا ظَنَنَّا أَنْ لَنْ تَقُولَ الْإِنْسُ وَالْجِنُّ عَلَى اللَّهِ كَذِبًا﴾

5.
மனிதர்களும், ஜின்களும் நிச்சயமாக அல்லாஹ் மீது பொய் கூறமாட்டார்கள் என்று மெய்யாகவே (இது வரை) நாங்கள் எண்ணிக்கொண்டு இருந்தோம்.

﴿وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِنَ الْإِنْسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا﴾

6. மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே (தங்களை) பாதுகாக்கக் கோருகின்றனர். எனவே, மனிதர்கள் அந்த ஜின்களுக்கு கர்வத்தை அதிகப்படுத்தி விட்டனர்.

﴿وَأَنَّهُمْ ظَنُّوا كَمَا ظَنَنْتُمْ أَنْ لَنْ يَبْعَثَ اللَّهُ أَحَدًا﴾

7.
நீங்கள் எண்ணுகிறபடியே அவர்களும் (இறந்த பின்னர்) அல்லாஹ், ஒருவரையும் (உயிர்கொடுத்து) எழுப்பமாட்டான் என்று நிச்சயமாக எண்ணிக் கொண்டனர்.

﴿وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا﴾

8. நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தடவிப் பார்த்தோம். அது பலமான பாதுகாவலர்களாலும், எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்.

﴿وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ۖ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا﴾

9. (முன்னர்) அங்கு (நடைபெறும் விஷயங்களைச்) செவியுறக்கூடிய பல இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்.
இப்பொழுதோ, (அவற்றைச்) செவியுற எவனும் சென்றால், நெருப்பின் ஒரு கங்கு அவனை (அடிப்பதற்காக) எதிர்பார்த்திருப்பதை அவன் காண்பான்.

﴿وَأَنَّا لَا نَدْرِي أَشَرٌّ أُرِيدَ بِمَنْ فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا﴾

10.
பூமியிலுள்ளவர்களுக்கு (இதனால்) தீங்கு விரும்பப்படுகிறதோ, அல்லது அவர்களின் இறைவன் (இதனால்) அவர்களுக்கு நன்மையை நாடியிருக்கிறானோ என்பதை நிச்சயமாக நாங்கள் அறிய மாட்டோம்.

﴿وَأَنَّا مِنَّا الصَّالِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَ ۖ كُنَّا طَرَائِقَ قِدَدًا﴾

11. நிச்சயமாக நம்மில் நல்லவர்களும் சிலர் இருக்கின்றனர்; மற்றவர்களும் நம்மில் சிலர் இருக்கின்றனர். நாம் பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டோம்.

﴿وَأَنَّا ظَنَنَّا أَنْ لَنْ نُعْجِزَ اللَّهَ فِي الْأَرْضِ وَلَنْ نُعْجِزَهُ هَرَبًا﴾

12.
நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்து கொண்டோம்.

﴿وَأَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدَىٰ آمَنَّا بِهِ ۖ فَمَنْ يُؤْمِنْ بِرَبِّهِ فَلَا يَخَافُ بَخْسًا وَلَا رَهَقًا﴾

13. (இந்த குர்ஆனிலுள்ள) நேரான வழிகளைச் செவியுற்றபோதே அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.
எவன் தன் இறைவனை நம்பிக்கை கொள்கிறானோ, அவன் நஷ்டத்தைப் பற்றியும், துன்பத்தைப் பற்றியும் பயப்படமாட்டான்.

﴿وَأَنَّا مِنَّا الْمُسْلِمُونَ وَمِنَّا الْقَاسِطُونَ ۖ فَمَنْ أَسْلَمَ فَأُولَٰئِكَ تَحَرَّوْا رَشَدًا﴾

14.
முற்றிலும் (அவனுக்கு) பணிந்து வழிப்பட்டவர்களும் நிச்சயமாக நம்மில் பலர் இருக்கின்றனர்; வரம்பு மீறியவர்களும் நம்மில் பலர் இருக்கின்றனர். எவர்கள் முற்றிலும் பணிந்து வழிப்படுகிறார்களோ, அவர்கள்தான் நேரான வழியைத் தெரிந்து கொண்டவர்கள்.

﴿وَأَمَّا الْقَاسِطُونَ فَكَانُوا لِجَهَنَّمَ حَطَبًا﴾

15. வரம்பு மீறியவர்களோ, நரகத்தின் எரி கட்டைகளாக ஆகிவிட்டனர்'' (இவ்வாறு ஜின்கள் கூறினர்.)

﴿وَأَنْ لَوِ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ لَأَسْقَيْنَاهُمْ مَاءً غَدَقًا﴾

16.
(நபியே! இந்த மனிதர்கள்) நேரான பாதையில் உறுதியாக இருந்தால், தடையின்றியே அவர்களுக்கு தண்ணீரைப் புகட்டிக் கொண்டிருப்போம்.

﴿لِنَفْتِنَهُمْ فِيهِ ۚ وَمَنْ يُعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهِ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًا﴾

17. இதில் அவர்களை நாம் சோதிப்போம். ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதையே புறக்கணிக்கின்றானோ அவனைக் கடினமான வேதனையில் அவன் புகுத்திவிடுவான்.

﴿وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا﴾

18. நிச்சயமாக பள்ளிவாசல் (மஸ்ஜிது)களெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) அழைக்காதீர்கள்.

﴿وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا﴾

19.
நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியா(ராகிய நம் தூத)ர், அவனைப் பிரார்த்தனை செய்து தொழ ஆரம்பித்தால், (இதைக் காணும் ஜின்களும், மக்களும் ஆச்சரியப்பட்டுக்) கூட்டம் கூட்டமாக வந்து அவரைச் சூழ்ந்துகொள்கின்றனர்.

﴿قُلْ إِنَّمَا أَدْعُو رَبِّي وَلَا أُشْرِكُ بِهِ أَحَدًا﴾

20.
(நபியே! அவர்களுக்கு) கூறுவீராக: ‘‘நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இறைவனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன்.

﴿قُلْ إِنِّي لَا أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا رَشَدًا﴾

21.
நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை செய்யவோ, தீமை செய்யவோ ஒரு சிறிதும் சக்தியற்றவன்'' என்றும் கூறுவீராக!

﴿قُلْ إِنِّي لَنْ يُجِيرَنِي مِنَ اللَّهِ أَحَدٌ وَلَنْ أَجِدَ مِنْ دُونِهِ مُلْتَحَدًا﴾

22. ‘‘நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை பாதுகாக்க முடியாது. அவனையன்றி அண்டும் இடத்தையும் நான் காணமாட்டேன்.'' என்றும் கூறுவீராக!

﴿إِلَّا بَلَاغًا مِنَ اللَّهِ وَرِسَالَاتِهِ ۚ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا﴾

23.
ஆயினும், அல்லாஹ்விடமிருந்து (எனக்குக் கிடைத்த) அவனுடைய தூதை எடுத்துரைப்பதைத் தவிர (எனக்கு வேறு வழியில்லை.
) ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறுசெய்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக நெருப்பு தான் (கூலியாகும்). அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்.

﴿حَتَّىٰ إِذَا رَأَوْا مَا يُوعَدُونَ فَسَيَعْلَمُونَ مَنْ أَضْعَفُ نَاصِرًا وَأَقَلُّ عَدَدًا﴾

24.
பயமுறுத்தப்பட்ட வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் சமயத்தில், எவனுடைய உதவியாளர், மிக்க பலவீனமானவர்கள் என்பதையும் (எவருடைய உதவியாளர்) மிக்க குறைந்த தொகையினர் என்பதையும் சந்தேகமின்றி அறிந்து கொள்வார்கள்.

﴿قُلْ إِنْ أَدْرِي أَقَرِيبٌ مَا تُوعَدُونَ أَمْ يَجْعَلُ لَهُ رَبِّي أَمَدًا﴾

25.
(நபியே!) கூறுவீராக: ‘‘உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை சமீபத்தில் இருக்கிறதா? அல்லது எனதிறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தி இருக்கிறானா என்பதை நான் அறிய மாட்டேன்.

﴿عَالِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَىٰ غَيْبِهِ أَحَدًا﴾

26. அவன்தான் மறைவான இவ்விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவன் ஆவான். மறைவாக உள்ள இவ்விஷயங்களை அவன் ஒருவருக்கும் வெளிப்படுத்துவது இல்லை.

﴿إِلَّا مَنِ ارْتَضَىٰ مِنْ رَسُولٍ فَإِنَّهُ يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ رَصَدًا﴾

27. ஆயினும், தன் தூதர்களில் எவர்களைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்கு அதை அவன் அறிவிக்கக் கூடும்.
(அதை அவன் அவர்களுக்கு அறிவித்த சமயத்தில்) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னும் பின்னும் (ஒரு மலக்கைப்) பாதுகாப்பவராக அனுப்பிவைக்கிறான்.

﴿لِيَعْلَمَ أَنْ قَدْ أَبْلَغُوا رِسَالَاتِ رَبِّهِمْ وَأَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَأَحْصَىٰ كُلَّ شَيْءٍ عَدَدًا﴾

28.
(அத்தூதர்கள்) தங்கள் இறைவனின் தூதுகளை மெய்யாகவே எடுத்துரைத்தார்கள் என்பதை, தான் அறிந்து கொள்வதற்காக (அவ்வாறு பாதுகாப்பாளரை அனுப்புகிறான்).
அவர்களிடம் உள்ளவற்றை அவன் தன் ஞானத்தால் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், ஒவ்வொரு பொருளின் கணக்கையும் முழுமையாக அறிந்தவனாக இருக்கிறான்.

الترجمات والتفاسير لهذه السورة: