السلام
كلمة (السلام) في اللغة مصدر من الفعل (سَلِمَ يَسْلَمُ) وهي...
156. நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம்.
வெளியூருக்கோ அல்லது போருக்கோ சென்று (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் இறந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்'' என்று (அந்நிராகரிப்பாளர்கள்) கூறுகின்றனர். அவர்களுடைய உள்ளங்களில் (என்றென்றுமே) இதை ஒரு கடும் துயரமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் தருகிறான். அல்லாஹ்வே உயிருடன் வாழச் செய்பவன்; மரணிக்கவும் வைப்பவன். நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் உற்று நோக்குகிறான்.