1 லுக்மான் (ரஹ்) தனது புதல்வனுக்கு கொடுத்த உபதேசம் காலத்தின் வரம்பை தாண்டி என்றென்றும் எல்லா பெற்றோருக்கும் பயன் தரக்கூடியதாகும். 3 லுக்மான் (ரஹ்) அவர்களும் “எனது பார்வயை தாழ்த்தி, நாவை கவனமாக பாதுகாத்து, ஹலாலானவைகளை மாத்திரம் சாப்பிட்டு, எனது கற்பை பாதுகாத்து, கொடுத்த வாக்குறுதிளை நிறைவேற்றி, எனது பொறுப்புகளை சரிவர செய்து, விருந்தாளிகளுக்கு சங்கை செய்து, அண்டை அயலவர்களுக்கு மரியாதை செய்து, எனக்கு சம்பந்தமற்றவைகளில் இருந்து நீங்கி எனது மரியாதையையும், கௌரவத்தையும் பாதுகாத்துக் கொண்டேன். நீங்கள் இன்று என்னை இந்த நிலையில் காண்பது இதன் மூலமே.” என்று கூறினார்கள்.