اللطيف
كلمة (اللطيف) في اللغة صفة مشبهة مشتقة من اللُّطف، وهو الرفق،...
80. (இதைப் பற்றி) அவருடன் அவருடைய மக்கள் தர்க்கித்தார்கள்.
அதற்கு (அம்மக்களை நோக்கி) அவர் கூறினார்: ‘‘நீங்கள், (படைப்பவனாகிய) அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் தர்க்கிக்கிறீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேரான வழியை அறிவித்துவிட்டான். என் இறைவன் எதையும் விரும்பினாலன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவை(கள் எனக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. ஆகவே, அவை)களுக்கு நான் பயப்படமாட்டேன். என் இறைவன் அனைவரையும்விட கல்வியில் மிக்க விசாலமானவன். (இவ்வளவுகூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?