المؤمن
كلمة (المؤمن) في اللغة اسم فاعل من الفعل (آمَنَ) الذي بمعنى...
93.
(நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹ்யி மூலம் அவனுக்கு எதுவும் அறிவிக்கப்படாமலிருக்க ‘‘தனக்கும் வஹ்யி வந்தது'' என்று கூறுபவனைவிட அல்லது ‘‘அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்'' என்று கூறுபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்.
நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களை பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்'' (என்று கூறுவதை நீர் காண்பீர்).