المليك
كلمة (المَليك) في اللغة صيغة مبالغة على وزن (فَعيل) بمعنى (فاعل)...
138. (மேலும், அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இது தடுக்கப்பட்டிருக்கிறது.
எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர், துறவி ஆகிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதைப் புசிக்கக்கூடாது'' என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன.
(அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருப்பெயரைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத்தக்க கூலியை (தண்டனையை, இறைவன்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான்.