ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிடைத்தது கனீமத் (இஃதனிம்) போன்ற பயன்பாடாக இருக்க வேண்டுமென ஹதீஸ் கூறுகின்றது. குறிப்பாக இளமைப் பருவத்தில் பத்தினித் தனத்துடன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு அல் -குர்ஆன் இப்றாஹீம்(அலை), யூசுப்(அலை) போன்றவர்களை முன்னுதாரணப்படுத்திருக்கின்றது. இன்று பாவங்கள் நடைபெறாமல் இருக்க சந்தர்ப்பங்கள் கிடைக்காமலிருப்பதே.இவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தும் தக்வாவின் காரணமாக அதனை புறமொதுக்கியவர்கள். தக்வாவை விட்ட அறிவு நலவைக் கொண்டு தரமாட்டாது என இங்கு கூறப்படுகின்றது.