الخلاق
كلمةُ (خَلَّاقٍ) في اللغة هي صيغةُ مبالغة من (الخَلْقِ)، وهو...
35. (‘‘சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியது நீங்கள் வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்றும் கேட்பீராக.
(அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியவன்'' (என்று கூறி) ‘‘நேரான வழியில் செலுத்தக்கூடியவனைப் பின்பற்றுவது தகுமா? அல்லது பிறர் அதற்கு வழி காண்பிக்காமல் தானாகவே வழி செல்ல முடியாததைப் பின்பற்றுவது தகுமா? உங்களுக்கு என்ன (கேடு) நேர்ந்தது? (இதற்கு மாறாக) நீங்கள் எவ்வாறு முடிவு செய்யலாம்'' என்றும் கேட்பீராக.