الوارث
كلمة (الوراث) في اللغة اسم فاعل من الفعل (وَرِثَ يَرِثُ)، وهو من...
49. இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் ஆக்குவான் (என்றும் இறைவன் கூறினான்.
பின்னர், ஈஸா பிறந்து தன் வாலிபத்தை அடைந்து இஸ்ராயீலின் சந்ததிகளிடம் சென்றபொழுது அவர்களை நோக்கிக் கூறியதாவது:) ‘‘நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதர். அதற்காக) உங்களுக்கு ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையைப் போல் செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (பறக்கும்) பறவையாக ஆகிவிடும். பிறவிக் குருடனையும் வெண் குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவற்றையும், உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு (திருப்தி அளிக்கக்கூடிய) ஓர் அத்தாட்சி இருக்கிறது (என்றும்,)