الفجر

تفسير سورة الفجر

الترجمة التاميلية

தமிழ்

الترجمة التاميلية

ترجمة معاني القرآن الكريم للغة التاميلية، ترجمها الشيخ عبد الحميد الباقوي، نشرها مجمع الملك فهد لطباعة المصحف الشريف بالمدينة المنورة. عام الطبعة 1434هـ.

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالْفَجْرِ﴾

1, 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!

﴿وَلَيَالٍ عَشْرٍ﴾

1, 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!

﴿وَالشَّفْعِ وَالْوَتْرِ﴾

3. ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக!

﴿وَاللَّيْلِ إِذَا يَسْرِ﴾

4. நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்).

﴿هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِذِي حِجْرٍ﴾

5. இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது.

﴿أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ﴾

6, 7.
(நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?

﴿إِرَمَ ذَاتِ الْعِمَادِ﴾

6, 7.
(நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?

﴿الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ﴾

8. அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.

﴿وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ﴾

9.
இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.

﴿وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ﴾

10.
இன்னும், (இராணுவங்களையுடைய) ஆணிக்கார ஃபிர்அவ்னை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?)

﴿الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ﴾

11. இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.

﴿فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ﴾

12. (பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.

﴿فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ﴾

13. ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.

﴿إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ﴾

14. நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்.

﴿فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ﴾

15.
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.

﴿وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ﴾

16.
ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்.

﴿كَلَّا ۖ بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ﴾

17. (விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.

﴿وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ﴾

18. ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.

﴿وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا﴾

19. பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்.

﴿وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا﴾

20. மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்.

﴿كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا﴾

21. அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,

﴿وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا﴾

22. உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்.

﴿وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ﴾

23. அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்?

﴿يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي﴾

24. ‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான்.

﴿فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ﴾

25. அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)

﴿وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ﴾

26. (பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)

﴿يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ﴾

27. (எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே!

﴿ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً﴾

28.
நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்)

﴿فَادْخُلِي فِي عِبَادِي﴾

29. ‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து,

﴿وَادْخُلِي جَنَّتِي﴾

30. என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்).

الترجمات والتفاسير لهذه السورة: